Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனா ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன்!

புஸாவ்: சீனா ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சீனாவின் லின் டானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனாவின் புஸாவ் நகரில் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-11, 13-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது அவரை எதிர்த்து விளையாடிய ஜெர்மனியின் மார்க் ஸ்விப்லர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

Indian shuttler K Srikanth wins 2014 China Open Super Series

இதையடுத்து ஸ்ரீகாந்த் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் சீனாவின் லின் டானை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். ஒலிம்பிக்கில் இரு முறையும், உலக சாம்பியன் ஷிப்பில் 5 முறையும் சாம்பியன் பட்டம் வென்றவர் லின் டான்.

இருப்பினும் ஸ்ரீகாந்த் அவரை திறமையாக எதிர்கொண்டு 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஏற்கெனவே மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 16, 2014, 14:16 [IST]
Other articles published on Nov 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+