Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாய்னா நேவால், சிந்து, கிடாம்பி அசத்தல்.. இந்தோனேசியா மாஸ்டர்ஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி

ஜகார்த்தா : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

சிந்து இந்த ஆண்டின் முதல் பாட்மிண்டன் தொடரில் பங்கேற்பதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப சிந்து சீனாவின் லீ சூரூய்-க்கு எதிரான மகளிர் ஒற்றையர் போட்டியில் 22-24, 21-8, 21-17 என்ற கேம்களில் வெற்றி பெற்றார்.

Indonesia Masters : Saina nehwal, PV Sindhu, Kidambi Srikanth start with a win

சாய்னா நேவால் மலேசியா மாஸ்டர்ஸ் அரையிறுதியில் தோல்வி அடைந்து இருந்தார். அதில் இருந்து மீண்டு இந்தோனேசியா மாஸ்டர்ஸ் தொடரில் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் டினார் அயுஸ்டின்-ஐ 7-21, 21-16, 21-11 என வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் 21-12, 21-8 என்ற செட்களில் வெற்றி பெற்றார். இவர்கள் மூவர் தவிர மற்ற இந்திய வீரர்கள் முதல் சுற்றில் தோல்வி அடைந்தனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் ப்ரநீத், சுபாங்கர் துபேய், பாருபள்ளி காஷ்யப் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தனர்.

Story first published: Thursday, January 24, 2019, 14:53 [IST]
Other articles published on Jan 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+