For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்.. இறுதிப் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

By Karthikeyan

ஜகார்த்தா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் சகாய் காசு மசாவுடன் பலப்பரீட்சை நடத்திய இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Indonesia Open: Srikanth stuns World No. 1 Son Wan-Ho to enter final

பின்னர் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் வான் ஹோவை எதிர்த்து களமிறங்கினார்.

முதல் செட்டை 21-15 என எளிதில் வென்ற கிடாம்பி இரண்டாவது செட்டை 14-21 என இழந்தார். பரபரப்பான மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் ஆவேசத்துடன் ஆடினர். கடைசி 24-22 என அந்த செட்டை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த் கிடாம்பி.

Story first published: Saturday, June 17, 2017, 20:18 [IST]
Other articles published on Jun 17, 2017
English summary

 India's Kidambi Srikanth stunned South Korea's world number Son Wan-Ho 21-15, 14-21, 24-22 to enter the final of Indonesia Open Super Series badminton tournament in men's singles category.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X