ரியோ: யார்ரா இந்தக் குட்டிப் பாப்பா.. இப்படித்தான் கேட்கத் தோன்றியது, ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்துவை எதிர்த்து மோதிய ஜப்பானின் ஒகுஹராவைப் பார்த்தபோது.
ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுஹராவை எதிர்கொண்டார் சிந்து. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிந்துவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் ஜப்பான் வீராங்கனை திணறிய காட்சிகளும் அரங்கேறின.

ஏனேனில் ஜப்பான் வீராங்கனையை விட சிந்து நல்ல உயரமானவர் என்பதால் அவர் அடித்த ஷாட்டுகளை எதிர்கொள்ளும் போது அடிக்கடி கீழே விழுந்து புதையல் எடுத்தார் ஒகுஹரா. இருப்பினும் சிந்துவுக்கு கடுமையான பைட் கொடுத்தார் அவர்.
இதனால் இரு செட்டுகளையும் போராடியே வெல்லநேரிட்டது சிந்துவுக்கு. இருப்பினும் 2வது செட்டை சற்று எளிதாக வென்றார் சிந்து.
ஜப்பான் வீராங்கனை தன்னால் சிந்துவை சமாளிக்க முடியாமல் போனாலும் கூட கடைசி வரை கடுமையாகப் போராடியது அனைவரையும் கவர்ந்தது.