Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஸ்ட் படம் ஏதாவது எடுத்தா ஜுவாலாவை யூஸ் பண்ணிக்கலாம் போல!

ஹைதராபாத்: திடீரென ஒரு திரில் புகைப்படத்தைப் போட்டு வைத்துள்ளார் ஜுவாலா கட்டா.. பார்க்கவே பயமாக இருப்பது போல இருக்கிறது இந்த போட்டோ.

லாக்டவுன் முடக்கத்தால் கடுப்பாகிப் போயுள்ள ஸ்போர்ட்ஸ் ஸ்டார்களில் ஜுவாலாவும் ஒருவர். வீட்டோடு இருந்தாலும் கூட பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி பெரும் நற்பெயரையும் ஈட்டினார். இவர் சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒன்றை போட்டுக் கொண்டே இருப்பார்.

Jwala Gutta photo goes viral

அந்த வகையில் இப்போதும் ஒரு போட்டோவை தனது டிவிட்டரில் போட்டுள்ளார். திடீரென பார்த்தால் பயந்து போய் விடுவார்கள்.. அப்படி ஒருதிரில் படமாக இருக்கிறது ஜுவாலாவின் தோற்றம் இதில்.

ஜுவாலா தனி அழகு கொண்டவர். அம்மா சீனா... அப்பா ஹைதராபாத் என்பதால் இருவரது அழகையும் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தவர். இந்தப் படத்திலும் கூட அழகாகத்தான் இருக்கிறார் ஜுவாலா.. ஆனால் தோற்றம்தான் பூச்சாண்டி காட்டுவது போல கலகலப்பாக இருக்கிறது.

கைகளில் நீண்ட விரல்கள்.. அதில் ரொம்ப நீளமாக வளர்ந்த நகங்கள்.. கண்களில் ஒரு தீர்க்கம்.. நீண்ட மூக்கு.. குவிந்த உதடுகள்.. தலையிலிருந்து தோள் வழியாக வழிந்து முன்புறம் விழுந்து கிடக்கும் நீண்ட கூந்தல்.. ரொம்ப நெருக்கமாக கேமராவை வைத்து எடுக்கப்பட்ட செல்பி.. என டெர்ரர் கெட்டப்பில் காணப்படுகிறார் ஜுவாலா.

பிறகென்ன ரசிகர்கள் வந்து குவிந்து விட்டனர் கமெண்ட்டுகளைக் குவிக்க... தாறுமாறான கமெண்ட்டுகளுடன் வெறித்தனமாக ரசிகர்கள் விளையாடிக் கொண்டுள்ளனர்.

Story first published: Wednesday, June 10, 2020, 14:34 [IST]
Other articles published on Jun 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+