For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேலையில் ஜுவாலா கட்டா.. பழைய போட்டோதான்.. பொழுதே போக மாட்டேங்குதாம்!

ஹைதராபாத்: பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கு பொழுதே போக மாட்டேங்குது போல.. விதம் விதமாக போட்டோ போட்டு பொழுதுகளை ஓட்டிக் கொண்டி வருகிறார்.

லாக்டவுன் எல்லோரையும் முடக்கிப் போட்டுள்ளது. எந்த வேலையும் ஓடவில்லை. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் தளர்த்தி வருகின்றனர். பஸ்களை கொஞ்சம் கொஞ்சமாக இயக்க ஆரம்பித்துள்ளனர். இதோ ரயில்களையும் ஓட்டப் போகிறார்கள். விமானங்களும் கூட ரெடியாகி விட்டன.

விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லையே தவிர விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகளை பாதுகாப்பாக நடத்தலாம் என்ற உத்தரவு வந்து விட்டது. மே 31ம் தேதி வரைதான் இந்த வறட்சி இருக்கும் போல.. ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு நிறைய தளர்வுகள் வரலாம் என்று தெரிகிறது.

போட்டோ போட்டு

போட்டோ போட்டு

பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் லாக்டவுனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு அகாடமியை நடத்தி வரும் ஜுவாலா பயிற்சி அளிக்க முடியாமல் ஒரு பக்கம் கஷ்டப்பட்டாலும் மறுபக்கம் தனது காதலர் நடிகர் விஷ்ணு விஷாலை பார்க்க முடியாமலும் தவித்து வருகிறார். இருந்தாலும் வெளியே வர முடியாது.. என்ன செய்வது.. .போட்டோ போட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

சும்மா படம்

சும்மா படம்

சமீபத்தில் ஒரு படம் போட்டிருந்தார்.. அதுக்குப் பேரு சும்மா.. ஆமாங்க ஜஸ்ட் அப்படின்னுதான் அதுக்கு கேப்ஷனே வச்சிருந்தார். படத்திலும் அவர் சும்மாதான் இருந்தார். போரடித்துப் போன முகம்.. கவலைகள் தெறிக்க படு சோகமான ஒரு போட்டோ அது. எதுக்கு இந்தப் படம் என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்று முன்பே யூகித்திருப்பார் போல.. அதனால்தான் முதலிலேயே சேப்டியாக சும்மா என்று போட்டு வைத்து விட்டார்.

நாய் செத்துப் போச்சு

நாய் செத்துப் போச்சு

அப்புறம் அவர் வளர்த்து வந்த டைசன் நாய் செத்துப் போய் விட்டது. நாய் மேல ரொம்பப் பாசமாக இருப்பார் போல. டைசன் நாயின் புகைப்படத்தைப் போட்டு ரிப் போட்டிருந்தார். பக் வகை நாய் அது. பார்க்கவே அழகாக இருந்தது. இந்த லாக்டவுன் நேரத்தில் ஜுவாலாவின் சோகத்தை இந்த பக் நாயின் மரணமும் இரட்டிப்பாக்கி விட்டது. பட்ட காலிலேயே படும் என்பார்களே அது போல.

படம் புதுசுதான்.. சேலைதான் பழசு

படம் புதுசுதான்.. சேலைதான் பழசு

அப்புறம் நேத்து ஒரு படம் போட்டிருந்தார். சேலை கட்டியபடி ஒயிலாக நிற்கிறார் அதில். எனக்கு சேலை என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று ஒரு கேப்ஷன். பழைய படம் போல. லாக்டவுன் மெமரீஸ் வரிசையில் இந்த சேலை போட்டோவைப் போட்டு விட்டுள்ளார். வழக்கம் போல ஹாட் ஸ்பைஸி என்று ரசிகர்கள் கூட்டம் கமெண்ட்டுகளை குவித்துக் கொண்டுள்ளனர்.

ஜுவாலா அப்பாவுக்குப் பிறந்த நாள்

ஜுவாலா அப்பாவுக்குப் பிறந்த நாள்

இன்று ஜுவாலாவின் அப்பாவுக்குப் பிறந்த நாள்.. இந்த லாக்டவுன் முடக்கத்தில் இதுதான் அவருக்கு நிச்சயம் சந்தோஷமான விஷயமாக இருக்க முடியும். ஜுவாலாவின் அப்பா ஆந்திராக்காரர். அம்மா சீனா. இந்த இருவரின் செல்லப் பிள்ளைகள் ஜுவாலாவும், அவரது அக்காவும். இருவரும் இணைந்து தங்களது தந்தையின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். சீக்கிரமே லாக்டவுன் முடியட்டும் என்ற வேண்டுதலுடன்.

Story first published: Friday, May 22, 2020, 16:47 [IST]
Other articles published on May 22, 2020
English summary
Badminton star Jwala Gutta has posted her photo in saree in her Instagram.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+