Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாட்மிண்டன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி- மகளிர் மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் வெற்றி

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார். சீனாவின் டான் லின் ஐ எதிர்கொண்ட கிதாம்பி ஸ்ரீகாந்த் போராடி தோற்றார்.

மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 58 கிலோ எடை பிரிவில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னாவவை 5-4 என்ற கணக்கில் வெற்றி கொண்டார்.

Kidambi Srikanth loses quarterfinals to China's Lin Dan in close 3-set contest

இதேபோல் மகளிர் ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்குத் தகுதி. 48 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் ருமேனியாவின் எமிலியா அலினாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் போகத்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கினார் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த். சீனாவின் டான் லின் ஐ உடன் வெற்றிக்காக போராடிய ஸ்ரீகாந்த் 2 - 1 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.

திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஜான் ஜோர்கென்ஸனை தோற்கடித்தார். ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய 2ஆவது இந்தியர் என்ற பெருமை பெற்ற ஸ்ரீகாந்த், சர்வதேச தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருக்கிறார். உலகின் 3வது இடத்தில் உள்ளவரும் ஒலிம்பிக் போட்டியில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சீனாவின் லின் டானை சந்தித்த ஸ்ரீகாந்த் தோல்வியை தழுவினார்.

அபாரமாக விளையாடிய சீன வீரர் லின் டான் மடமடவென புள்ளிகளைக் கைப்பற்றி 6-21 என முதல் செட்டை தனதாக்கினார். முதல் செட்டில் சொதப்பிய ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றில் தனது முழு திறமையையும் காட்டினார். இரண்டாவது செட்டை 21-11 என்று கைப்பற்றி லின் டானுக்கு பதிலடி கொடுத்தார்.

மூன்றாவது செட்டில் இருவருமே மாறிமாறி முன்னிலை பெற்றுவந்தனர். இருவரும் சமநிலையில் இருந்த ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் அடுத்தடுத்து மூன்று புள்ளிகளை அதிரடியாக வென்றார். ஆனால், அந்த முன்னிலையைத் தக்க வைக்கத் தவறினார்.

வலது கையால் விளையாடும் கிடாம்பிக்கு இடதுபுறம் வந்து அடிப்பது கடினம் என்று அவரது பலவீனத்தை உணர்ந்து விளையாடினார் லின் டான். தொடர்ந்து கிடாம்பிக்கு பலவீனமான திசையில் அவரை ஆடவைத்த லின் டான் செட்டின் இறுதிக்கட்டத்தில் ஸ்ரீகாந்தை அசரடித்தார். இருப்பினும், லின் டான் தவறு செய்தபோது தனக்குக் கிடைத்த வாயப்புகளை கோட்டைவிட்ட ஸ்ரீகாந்த் கடைசி செட்டில் 21 -18 என இயன்ற வரை போராடி வெற்றியை பறிகொடுத்தார்.

மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 58 கிலோ எடை பிரிவில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னாவவை 5-4 என்ற கணக்கில் வெற்றி கொண்டார்.

இதேபோல் மகளிர் ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்குத் தகுதி. 48 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் ருமேனியாவின் எமிலியா அலினாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் போகத்.

Story first published: Wednesday, August 17, 2016, 19:51 [IST]
Other articles published on Aug 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+