Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மலேசிய ஓபன் பாட்மிண்டன்.. 2வது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்.. சாய்னா அவுட்!

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில், பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த், நம்பிக்கை அளிக்கும் வகையில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நேவால், இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பாக மூவர் பங்கேற்றனர்.

இவர்களில், சமீர் வர்மா இந்தோனேசியாவின் சுகியார்டோவிடம் எளிதாக வீழ்ந்தார். மற்றொரு இந்தியரான, சாய் ப்ரணீத் சைனிஸ் தைபெய் நாட்டை சேர்ந்த, வாங்கிடம் 21-12, 21-7 என்ற செட்களில் தோற்றார்.

கிடாம்பிக்கு வெற்றி

கிடாம்பிக்கு வெற்றி

கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஜோர்கேன்செனை 21-18, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இன்று நடந்த இரண்டாவது சுற்றில், பிரணீத்தை வீழ்த்திய வாங்கை, 22-20, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

சிந்து தேறுவாரா?:

சிந்து தேறுவாரா?:

இந்தியா சார்பாக பெண்கள் பிரிவில் பங்கேற்ற சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்றில், இன்று நடந்த போட்டியில் சாய்னா, ஜப்பானின் அகானேவிடம் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறினார். சிந்து இன்று இரண்டாவது சுற்றில் விளையாட உள்ள நிலையில், அதில் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டையர் பிரிவில் ஏமாற்றம்

இரட்டையர் பிரிவில் ஏமாற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற ரான்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற சிக்கி ரெட்டி, பிரணாவ் ஜெர்ரி மற்றும் ரோகன் கபூர், குஹூ கார்க் ஜோடிகள் அனைவரும முதல் சுற்றோடு வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

கிடாம்பி, சிந்து ஜொலிப்பார்களா?

கிடாம்பி, சிந்து ஜொலிப்பார்களா?

ஆண்கள் பிரிவில் ஏழாவது ரேங்க்கில் இருக்கும் கிடாம்பி, மற்றும் பெண்கள் பிரிவில் மூன்றாவது ரேங்க்கில் இருக்கும் சிந்து, ஆகிய இருவர் மட்டுமே இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் களத்தில் நிற்கிறார்கள். மற்ற அனைவரும் வெளியேறி விட்ட நிலையில், இந்த இருவராவது, இந்தியாவின் பெயரை மலேசிய ஓபனில் நிலை நிறுத்துவார்களா? என பார்ப்போம்.

Story first published: Friday, June 29, 2018, 11:11 [IST]
Other articles published on Jun 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+