பி.வி.சிந்துவை விட பலம் வாய்ந்த ஸ்பெயினின் கரோலின் மரீன்
ரியோ டி ஜெனீரோ: பி.வி. சிந்துவும், அவரை எதிர்த்து இன்று இறுதிப் போட்டியில் மோதிய ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினும் இதற்கு முன்னர் 7 முறை மோதியுள்ளனர். அதில் அதிக முறை மரின் வென்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மரினும், இந்தியாவின் பி.வி.சிந்துவும் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மோதினர்.
இவர்கள் இருவரும் மோதியது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 7 முறை இருவரும் நேருக்கு நேர் களம் கண்டுள்ளனர்.
(ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அசத்திய பிவி சிந்து- படங்கள்)

8வது மோதல்
இன்றைய இறுதிப் போட்டி இருவருக்கும் எட்டாவது மோதலாக அமைந்தது. இதற்கு முன்பு மோதிய 7 போட்டிகளில் 4-3 என்ற வெற்றிக் கணக்கில் மரின் முன்னணியில் இருக்கிறார்.

மரினுக்கு 4.. சிந்துவுக்கு 3
கடந்த 7 போட்டிகளில் மரின் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சிந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அந்த வகையில் சிந்துவை விட ஒரு போட்டியில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார் மரின்.

மரின் வென்ற போட்டிகள்
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான மரின் 2015ல் நடந்த ஹாங்காங் ஓபன், சையத் மோடி சர்வதேச சாம்பியன்ஷிப், 2014ல் நடந்த பிடபிள்யூஎவ் உலக சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய போட்டிகளில் சிந்துவை வீழ்த்தியுள்ளார்.

சிந்து வென்ற போட்டிகள்
பி.வி.சிந்து, 2010ல் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், 2011ல் மாலத்தீவு சர்வதேச சாலஞ்ச் போட்டி, 2015ல் நடந்த டென்மார்க் ஓபன் ஆகிய போட்டிகளில் மரினை வீழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications