For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குதிகால் தசை நார் காயத்துக்கு சிகிச்சை... சாய்னா நேவாலுக்கு 2 வாரம் ரெஸ்ட்

டெல்லி: பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவாலுக்கு கடந்த வாரம் குதிகால் தசைநாரில் வலி ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகின்றார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவால். அவர் வலது குதிகாலில் தசை நாரில் காயம் அடைந்தார். அதே காயத்துடன் சீன ஓபனில் விளையாடினார்.

No major injury concern for Saina Nehwal

இந்த நிலையில் வலி அதிகரிக்கவே, மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டதில் காலில் உள்ள எலும்பு பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே வலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு வார காலத்திற்கு அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து சாய்னா ஓய்வில் உள்ளார்.

டிசம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டிசில் சூப்பர் சீரியஸ் பேட்மிண்டன் போட்டி தொடங்குகிறது. அதற்குள் சாய்னா குணம் அடைந்து விடுவார் என்று தெரிகிறது.

Story first published: Friday, November 20, 2015, 15:18 [IST]
Other articles published on Nov 20, 2015
English summary
Saina Nehwal's fans can heave a sigh of relief as the ace shuttler is set to regain full fitness in a couple of weeks. Her foot injury is not serious but she has been advised a week's rest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X