Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - யாருப்பா நீ! பேட்மிண்டனில் புதிய சூப்பர் ஸ்டார்.. லக்சயா சென், பிவி சிந்து முன்னேற்றம்

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு கால் இறுதியின் முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றனர். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற பிவி சிந்து இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 73 ஆவது நிலையில் உள்ள கிறிஸ்டின் குபா என்ற வீரரை பிவி சிந்து எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பிவி சிந்து 21 க்கு 5, 21க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனை அடுத்து ஆடவர் ஒற்றைப் பிரிவில் உலகின் மூன்றாவது நிலை வீரரான ஜனார்த்தன் கிறிஸ்டியை இந்திய வீரர் லக்ஷயா சென் எதிர்கொண்டார்.

Olympics 2024 Lakshya sen PV Sindhu Badminton 2024

தொடக்கம் முதலே கிறிஸ்டின் அதிரடியாக விளையாடி புள்ளிகளை குவித்தார். அப்போது எட்டுக்கு இரண்டு என்ற கணக்கில் கிறிஸ்டின் முன்னிலையில் இருந்தார். திடீரென்று சீறிப்பாய்ந்த லக்சயா சென் களத்தில் மேஜிக் காட்டினார். லக்சயா சென் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து எட்டு புள்ளிகளை பெற்றார்.

இதன் மூலம் பத்துக்கு பத்து என புள்ளிகள் சமனில் முடிந்தது. குறிப்பாக முதல் செட் இறுதியில் கிறிஸ்டின் அடித்த பந்தை லக்சயா சென் கையை பின்னால் வைத்து சைடாக அடித்தார்.
அ ந்த சாட்டை பார்த்ததுமே கிறிஸ்டின் நிலை குலைந்து போக லக்‌ஷன் முதல் செட்டை 21 க்கு 18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டிலும் லக்சயா சென் தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னேற்றம் அடைந்தார்.

உலகின் மூன்றாம் நிலை வீரராக ஜனதா கிறிஸ்டி இருந்தாலும், லக்ஷயாசன் அவருக்கு தண்ணீர் காட்டினார். இதனால் 21 க்கு 18, 21 க்கு 12 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்று கால் இறுதி முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனிடையே, டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அக்கூலா தரவரிசையில் 52வது இடத்தில் இருந்த ஜியான் செங்கை நான்குக்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

இதேபோன்று ஆடவருக்கான ஐம்பது மீட்டர் ரைப்பில் த்ரீ பொசிஷன் பிரிவில் (மூன்று விதமான நிலையில் நின்று துப்பாக்கிச் சுடுதல்) இந்திய வீரன் ஸ்வாப்னில் குஷால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். இந்த போட்டி வியாழக்கிழமை நாளை மதியம் ஒரு மணிக்கு நடைபெறுகிறது.

Story first published: Wednesday, July 31, 2024, 16:25 [IST]
Other articles published on Jul 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+