நம்பிக்கை தந்த பி.வி.சிந்து... ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் வெற்றி!
ரியோ டி ஜெனிரோ: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இன்று பாட்மிண்டன் போட்டிகள் துவங்கின. இதில் தர வரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து எம் பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

உலக சாம்பின்ஷிப்பில் இரு முறை வெண்கலப் பதக்கம் வென்ற சிந்து தனது முதல் ஆட்டத்தில் இன்று ஹங்கேரியின் லாரா சாரோஸூடன் மோதினார்.
இதில் துவக்கம் முதல் அசத்திய பி.வி.சிந்து, முதல் செட்டை, 21-8 என மிகச் சுலபமாக வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-9 என கைப்பற்றினார்.
முடிவில், ஹங்கேரியாவின் லாரா சாரோசியாவை 21-8, 21-9 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து.
Story first published: Friday, August 12, 2016, 11:48 [IST]
Other articles published on Aug 12, 2016


Click it and Unblock the Notifications