Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதியில் பி.வி.சிந்து... உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தல்!

நான்ஜிங் : இந்தியாவின் பி.வி.சிந்து, உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜப்பானின் நோசொமி ஒக்குஹாரா-வை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் ஒக்குஹாரா உடனான மோதல்களில் 6 வெற்றிகள் பெற்று, 6-6 என சமன் செய்துள்ளார்.

சீனாவின், நான்ஜிங் நகரில் நடந்து வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. அதில், பி.வி.சிந்து 21-17, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.


தொடர்ந்த முன்னிலை :

தொடர்ந்த முன்னிலை :

ஆட்டத்தின் முதல் கேமில், துவக்கத்தில் பின்தங்கி இருந்த சிந்து, பின்பு 11-10, என முதன் முறையாக முன்னிலை பெற்றார். அதை தொடர்ந்து இரண்டு புள்ளிகள் முன்னிலையோடு தொடர்ந்து முன்னேறிய அவர், 21-17 என முதல் கேமை கைப்பற்றினார்.

விறுவிறுப்பான ஆட்டம்

விறுவிறுப்பான ஆட்டம்

இரண்டாவது கேமில், ஒக்குஹாரா 5-0 என துவக்கத்தில் அதிக முன்னிலையில் இருந்தார். சிந்து சிறிது, சிறிதாக முன்னேறி 11-8 என்ற நிலைக்கு வந்தார். இதன் பின், இரண்டு வீரர்களும் ஒருவர் மாற்றி ஒருவர், புள்ளிகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் 15-15 என சம அளவில் இருந்தனர். எனினும், இறுதியில், சிந்து 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

பழி தீர்த்த சிந்து

பழி தீர்த்த சிந்து

இதே ஜப்பானின் ஒக்குஹாரா-விடம் சமீபத்தில் தாய்லாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தார் சிந்து. அதே போல சென்ற ஆண்டின் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியிலும் தோல்வி அடைந்து இருந்தார். அதற்கு, பழி தீர்க்கும் வகையில் அமைந்தது சிந்துவின் இந்த வெற்றி.

அரையிறுதியில் கடினமான சவால்

அரையிறுதியில் கடினமான சவால்

அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் சிந்து, அதில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில இருக்கும் ஜப்பானின் அகானே யமகூச்சி-ஐ சந்திக்க உள்ளார். சிந்து தற்போது பாட்மிண்டன் பெண்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவுக்கு இந்த போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். பி.வி.சிந்து மட்டுமே அரையிறுதி வரை எட்டியுள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிந்து சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என நம்புவோம்.

Story first published: Saturday, August 4, 2018, 13:06 [IST]
Other articles published on Aug 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+