Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீன ஓபன் பேட்மிண்டன்.. இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து !

பீஜிங்: சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில், தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து.

சீனாவின் புஷாவ் நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து, தென் கொரியாவின் சங் ஜி யுங் மோதினர்.

 P.V Sindhu enters China Open final

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாக போராடி முதல் செட்டை 11-21 என்ற செட் கணக்கில் இழந்தார் சிந்து. கடும் சவால்களுக்கு இடையே இரண்டாவது செட்டை எதிர்கொண்ட சிந்து, 23-21 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பரபரப்பான மூன்றாவது செட்டை 21-19 என்று கணக்கில் கைப்பற்றினார் சிந்து.

இறுதியில் பி.வி. சிந்து, சங் ஜி யுங்கை 11-21, 23-21, 21-19 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவின் சின் யுவை எதிர்கொள்கிறார் சிந்து.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சிந்து, தற்போது சீன ஓபன் போட்டியில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார்.

Story first published: Saturday, November 19, 2016, 19:06 [IST]
Other articles published on Nov 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+