ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
கவ்லூன்: ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இன்று, சிங்கப்பூர் வீராங்கனை ஜியாவ் லியாங்கை எதிர்கொண்டார்.

ஆரம்பத்திலேயே அட்டாக்கை ஆரம்பித்தார் சிந்து. இதனால் முதல் செட்டை 21-17 என்று வென்றார். இதை தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 21-23 என ஜியாவ் லியாங் போராடி கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் முதலில் தடுமாறிய சிந்து பிறகு புயலென பாய்ந்து, 21-18 என கைப்பற்றினார்.
எனவே போட்டியின் இறுதியில், சிந்து, 21-17, 21-23, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
Story first published: Friday, November 25, 2016, 13:20 [IST]
Other articles published on Nov 25, 2016


Click it and Unblock the Notifications