Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப்போட்டி தோல்வி குறித்து கவலை இல்லை..உலக சாம்பியன்ஷிப்பை குறி வைக்கும் பி.வி.சிந்து

டெல்லி: பி.வி.சிந்து இந்த ஆண்டு மூன்று முறை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்தார். கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தாய்லாந்து ஓபன் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். ஆனால், இறுதிப் போட்டித் தோல்விகள் கண்டு தான் கவலை அடையவில்லை என தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு, ஆறு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சிந்து, அதில் மூன்று முறை வென்றார். சிந்துவைப் பொறுத்தவரை, அவரின் ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டில் பல முறை கடினமான வீராங்கனைகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்று இருக்கிறார். ஆனால், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளோடு பல தொடர்களில் இருந்து வெளியேறினார்.

pv sindhu is positive about world badminton championship and asian games


வரும் ஜூலை 30 முதல் நடக்க உள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க சீனா செல்ல உள்ளார், சிந்து. அதன் பின், ஏசியன் கேம்ஸ் தொடரிலும் இந்தியா சார்பாக பங்கேற்கிறார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டியில், “நான் உலக சாம்பியன்ஷிப்பில் மிக நன்றாக விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக நான் சிறப்பாக தயாராகி வருகிறேன். அதே போல, ஏசியன் கேம்ஸிலும் நன்றாக விளையாட வேண்டும். உலக சாம்பியன்ஷிப் தொடரில் எனக்கு கடினமான போட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால், அதை நான் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. காலிறுதிக்கு முன் உள்ள போட்டிகளில் நான் எளிதாக வெல்ல முடியாது. மேலும், 64 வீரர்கள் ஆடும் தொடர் அது. என் முதல் ஆட்டத்தில் பிட்ரியானி-ஐ எதிர்கொள்கிறேன். இதற்கு முன் அவருடன் நான் விளையாடி இருக்கிறேன். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்

தனது இறுதிப்போட்டி தோல்விகளை பற்றி கூறுகையில், “சில சமயம் நான் இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்து விடுகிறேன் என எனக்கு தெரியும். ஆனால், எல்லாவற்றிலும் நன்மை மற்றும் தீமை இருக்கின்றன. காலிறுதி மற்றும் அரையிறுதியில் நீங்கள் தோல்வி அடைந்தால், நீங்கள் செய்த தவறுகளில் இருந்து அதிகம் கற்றுகொள்ளலாம். நீங்கள் நன்றாக விளையாடினாலும், சில சமயம் உங்களால் வெல்ல முடியாமல் போகலாம். இறுதிப்போட்டி தோல்விகளை கண்டு நான் கவலைப்படவில்லை. வெற்றிக்கு அடுத்த சிறந்த விஷயம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவது தான்” என கூறினார்.

தோல்விகளை கண்டு துவளாத சிந்து, மிகவும் நேர்மறை சிந்தனைகளுடன் இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரை அணுக உள்ளார். இந்த தொடரில், சிந்து தொடக்க நிலையிலேயே கடினமான வீரர்களை எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. அந்த சவாலை எதிர்த்து சிந்து சாம்பியன்ஷிப் வெல்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.





Story first published: Thursday, July 26, 2018, 13:19 [IST]
Other articles published on Jul 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+