பி.வி.சிந்துவுக்கு மீண்டும் ஒரு பைனல் தோல்வி.. இந்தாண்டு இது 4வது!
நான்ஜிங் : உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பி.வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளார் சிந்து.
இந்த ஆண்டு இதுவரை நான்கு முறை பாட்மிண்டன் தொடர்களின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்து வருகிறார் சிந்து.

இந்த இறுதிப் போட்டிக்கு முன் வரை, கரோலினா மரின் மற்றும் சிந்து, இருவரும் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் சம நிலையில் இருந்தனர் எனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டத்தில், துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினார் மரின். 5-0 என முதல் கேமில் முன்னிலை வகித்தார். சிந்து சுதாரித்து புள்ளிகளை பெற்றார். 18-18 என சம நிலையை எட்டினாலும், முதல் கேமை 21-19 என கைப்பற்றினார் மரின்.
முதல் கேமில் நன்றாகவே ஆடிய சிந்து, இரண்டாவது கேமில், மரினின் துவக்கநிலை அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், ஆடினார். ஒரு கட்டத்தில் 2-11 என பெரிய அளவில் பின்தங்கிய சிந்து, இறுதியில் 10-21 என இரண்டாவது கேமை இழந்து, தோல்வியை தழுவினார்.
கரோலினா மரினுக்கு இது மூன்றாவது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டமாகும். அதே சமயம், சிந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் தொடரில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த தோல்வியிலும் ஒரு நல்ல விஷயமாக, இந்தியா சார்பில் சாம்பியன்ஷிப் தொடரில் நான்கு பதக்கங்கள் பெற்றுள்ள முதல் நபர் ஆவார். 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் வெண்கலமும், சென்ற ஆண்டும், இந்தாண்டும் வெள்ளியும் வென்றுள்ளார்.
பதக்கங்கள் கிடைத்தாலும், இறுதிப் போட்டி தோல்விகளால் துவண்டு இருந்தாலும், அடுத்த போட்டிகளுக்கு தான் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார் சிந்து. அடுத்து அவர், ஏசியன் கேம்ஸில் பங்கேற்க உள்ளார்.
Story first published: Monday, August 6, 2018, 8:17 [IST]
Other articles published on Aug 6, 2018


Click it and Unblock the Notifications