Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்- பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி.. கரோலின் மரீனுக்கு சோகம்

Lakshya sen : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் அரையியறுதியில் போராடி தோல்வியை தழுவினார். லக்சயா சென்-ஐ பொறுத்தவரை ஆடவர் பிரிவில் அரை இறுதி வரை முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமை லக்சயா சென்னுக்கு சேரும்.

இந்த நிலையில் அரையிறுதியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை லக்சயா சென்-ஐ எதிர்கொண்டார். லக்சன் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பிறகு சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்து புள்ளிகளை சேர்த்தார்.

Olympics 2024 badminton Lakshya sen 2024

ஒரு கட்டத்தில் விக்டர் ஒன்பதுக்கு எட்டு என்ற புள்ளி கணக்கில் முன்னிலை இருந்தாலும்,லக்சயா சென் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்து ஏழு புள்ளிகளை குவித்தார். இதனால் 15 க்கு 9 என்ற கணக்கில் லக்சயாசன் முன்னிலை இருந்தார். அதன் பிறகு விக்டர் காம் ஏன் ஒரு ஒலிம்பிக் சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

முதல் செட்டில் பின்தங்கி இருந்தாலும் பின் தன்னுடைய ஏ ப்ளஸ் கேமை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். முதல் செட்டை கைப்பற்ற லக்சயாவுக்கு ஒரு புள்ளிதான் இருந்த நிலையில், விக்டர் அடுத்தடுத்து நான்கு புள்ளிகளை சேர்த்து 22 க்கு 20 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இதை அடுத்து இரண்டாவது செட்டில் மீண்டும் லக்சயாசன் அபாரமாக விளையாடி ஏழுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால் மீண்டும் அபாரமாக விளையாடி விக்டர் புள்ளிகளை குவித்து ஆட்டத்திற்குள் வந்தார். ஒரு கட்டத்தில் லக்சயா சென்-ஐ தன்னோடு அனுபவ ஆட்டத்தை மூலம் புள்ளிகளை தொடர்ந்து குவித்து அதிர்ச்சி அளித்தார்.

இதனால் இரண்டாவது செட்டை 21 க்கு 16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை லக்சயா இழந்தாலும் நாளை வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரீன் விளையாடினார்.

இதில் முதல் செடை 21க்கு 14 என்ற கணக்கில் கரோலின் மரீன் முன்னிலை பெற்றாலும் இரண்டாவது செட்டில் திடீரென்று அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த கரோலின் மாதிரி போட்டியிலிருந்து விலகி சென்றார் இதன் மூலம் அவருடைய ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது.

Story first published: Sunday, August 4, 2024, 17:09 [IST]
Other articles published on Aug 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+