Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெள்ளிப் பதக்கத்தை வென்ற சிந்து.. சிந்து.. இந்தியாவே உச்சரிக்க காரணமானவர் யார்?

ஹைதராபாத்: சிந்து.. சிந்து... ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த சிந்துவின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட பயிற்சியாளர் கோபி சந்த் உழைப்பை கொஞ்சம் பார்ப்போம்.

பி வி சிந்துவிற்கு பின் நின்று செவ்வனே என்று வேலை செய்து வந்தவர் பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த். ஹைதராபாத் பெண்ணான சிந்துவை ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற கடும் பயிற்சியை அளித்தவர் இவர். மேலும், உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரரான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர் கொள்ளும் துணிச்சலை அளித்தவரும் இவரே.

Pullela Gopichand for giving us champion PV Sindhu

சிறந்த விளையாட்டு வீரரான கோபிசந்த் விளையாட்டுத் துறையில் இருந்து தான் ஓய்வு பெற்ற பின்னர், ஹைதராபாத்தில் பேட்மிண்டன் பயிற்சிக் கூடாத்தை உருவாக்கினார்.

ஒரு உலக சாம்பியனை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. எந்த விளையாட்டானாலும் கடும் உழைப்பும் தியாகமும் இருந்தால் தான் சாதனையின் உச்சத்தை தொட முடியும்.

(ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அசத்திய பிவி சிந்து- படங்கள்)

அந்த வகையில், கோபிசந்த்தின் ஒவ்வொரு மணி நேரப் பயிற்சியும், வழிகாட்டுதல்களும்தான் சிந்துவை ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியர்கள் யாரும் இதுவரை பெறாத வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் சிந்து. இதற்கு காரணம் கோபிசந்த் கொடுத்த பயிற்சிமும் ஊக்கமும்தான்.

வெள்ளிப் பதக்கத்தை வென்ற சிந்துவை உருவாக்கியதில் பயிற்சியாளர் கோபிசந்த்தின் கடும் உழைப்பையும், பயிற்சியையும் பெருமளவில் பாராட்டுகிறார் சிந்துவின் தாயும் முன்னாள் வாலிபால் விளையாட்டு வீராங்கனையுமான விஜயா.

கோபிசந்த் கொடுத்த பயிற்சிதான் இந்தியாவிற்கு சாய்னா நெய்வாலையும் கொடுத்துள்ளது. இவர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சிந்துவும் சாய்னா நெய்வாலும் மட்டுமல்ல. ரியோ ஒலிம்பிக்கில் மயிரிழையில் அரையிறுதியை தவற விட்ட கிடம்பி ஸ்ரீகாந்த்தும் இவரது உருவாக்கம்தான்.

சாதனை படைத்துள்ள இவர்களை தவிர இன்னும் பல இளையவர்கள் கோபிசந்த் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் சாய்னா, சிந்து போல ஒளிர்வார்கள் என்ற நம்பலாம்.

நன்றி.. கோபிசந்த். உலகின் சிறந்த ஒலிம்பிக் போட்டியில் உங்கள் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுவிட்டார். சிந்துவுக்கும் இந்தியாவுக்கும் உங்களது விளையாட்டுத் திறனும் பயிற்சியும் அவசியம்.

Story first published: Friday, August 19, 2016, 21:49 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+