Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பி.வி சிந்து கோ பார் கோல்டு... டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

ரியோ : ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு இந்தியா பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை எதிர்கொண்ட சிந்து 2 க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு எளிதாக நுழைந்தார்.

இந்த வெற்றியை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். சிந்துவிற்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அரையிறுதி வெற்றிக்கு வாழ்த்து கூறும் அதே நேரத்தில் தங்கத்தை நோக்கி முன்னேறு சிந்து என்ற ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் கோயல்

விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தனது வாழ்த்துச் செய்தியில், 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோசோமி ஓகுராவிற்கு எதிராக 11 நேரடி பாய்ன்ட்களை புயலாக எடுத்து வென்றுள்ளார் சிந்து இது ஒரு அருமையான விளையாட்டு என்று கூறியுள்ளார் கூடவே கோ பார் கோல்டு என்றும் பதிவிட்டுள்ளார்.

கபில் தேவ்

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது பதிவில், ஐ சல்யூட் யூ பி.வி சிந்து. மற்றொரு பெண் போட்டியாளர் வரலாறு சாதனை படைத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

டாக்டர் ராமன் சிங்

சட்டீஸ்கர் முதல்வர் டாக்டர் ராமன்சிங் தனது பதிவில், என்ன ஒரு புத்திசாலித்தனமாக விளையாட்டு சிந்து.. நாங்கள் பெருமைப்படுகிறோம். தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் சிந்து என்று பதிவிட்டுள்ளார்.

சரத்குமார்

நடிகரும் சமக தலைவருமாக சரத்குமார் தனது வாழ்த்துச் செய்தியில், பெருமையாக உணர்கிறோம் சிந்து என்னும் புயல் ஒலிம்பிக் பாட்மிட்டன் இறுதிப் போட்டியிலும் வீசவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா

சிந்து மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடினர். தங்க மங்கைகள் இந்தியாவிற்காக போராடுகிறார்கள். இது பெண்கள் சக்தி என்று பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

Story first published: Thursday, August 18, 2016, 22:25 [IST]
Other articles published on Aug 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+