Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்கில் தோற்றாலும் டுவிட்டர் யுத்தத்தில் கரோலினா மரினை வென்ற பிவி சிந்து!

ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் தங்கத்தை தவறவிட்ட போதும் டுவிட்டர் யுத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் நம்பர்1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினாவிடம், கடுமையாக போராடி தோல்வியடைந்தார்.

PV Sindhu becomes overnight sensation, ​gets over 630,000 tweets within three hours

இருப்பினும் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சிந்து, மூன்றே நாளில் , நம்பர் 1 வீராங்கனையான கரோலினாவை டுவிட்டரில் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

கடந்த 17 ஆகஸ்டில், ,சிந்துவை டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை, 38,600 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்துக்கான போட்டிக்குபின் இந்த எண்ணிக்கை தற்போதுவரை மட்டும் 1,70,000 த்தை தாண்டியுள்ளது. கரோலினாவை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை வெறும் 95,000 மட்டுமே.

வெள்ளிக்கிழமை இரவு மட்டும் சிந்துவிற்காக 6 லட்சத்து 30 ஆயிரம் டுவிட்கள் பதிவிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரபல கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்களும் சிந்துவை பாராட்டியும், வாழ்த்தியும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் மரினிடம் தோற்ற சிந்து டுவிட்டரில் மரினை வென்றுவிட்டார்.

Story first published: Sunday, August 21, 2016, 9:47 [IST]
Other articles published on Aug 21, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+