Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியன் ஓபன் பேட்மிண்டன்.. காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

டெல்லி: இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை கவாகாமியை நேர்செட்கணக்கில் வீழ்த்திய சிந்து பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-17, 21-6 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை அருந்ததியை சாய்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

 PV Sindhu enter quarter-finals of the India Open World Superseries badminton

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை கவாகாமியை 21-16,23-21 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.

இதனிடையே சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 21 - 10, 21 - 17 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷின் லீயைத் தோற்கடித்தார். அதேபோன்று ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா 21 - 17, 21 - 10 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தினார்.

Story first published: Friday, March 31, 2017, 2:18 [IST]
Other articles published on Mar 31, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+