For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய் சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் இறுதி போட்டி... பிவி சிந்து போராடி தோல்வி

துபாயில் நடந்த சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் தொடரின் இறுதி போட்டியில் பிவி சிந்து போராடி தோல்வி அடைந்தார்.

By Shyamsundar

அபுதாபி: துபாயில் நடந்த சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் தொடரின் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். ஜப்பான் நாட்டை சேர்ந்த 'அகானே யமாகுச்சி' என்ற வீராங்கனையிடம் போராடி சிந்து தோல்வி அடைந்தார்.

துபாயில் கடந்த சில நாட்களாக சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் மிகவும் சிறப்பாக ஆடி இருந்த பிவி சிந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்.

PV Sindhu last to Japan's player in Super Series Badminton

இன்று நடந்த இறுதி போட்டியில் கோப்பை யாருக்கு என்பதற்காக ஆட்டம் நடைபெற்றது. ஜப்பானின் முன்னணி வீராங்கனையான 'அகானே யமாகுச்சி' என்பவருக்கு எதிராக நடந்த இந்த போட்டியில் சிந்து தொடக்கத்தில் அதிரடியாக ஆடினார்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் சிந்து கையில் இருந்து நழுவிப்போனது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 21-15, 12-21, 19-21 என்ற கணக்கில் சிந்து தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் ஜப்பான் வீராங்கனை 'அகானே யமாகுச்சி' தங்கப்பதக்கம் வென்றார். சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். சாய்னா நேவாலுக்கு அடுத்து 'சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் தொடரில்' வெள்ளி வென்ற இரண்டாவது வீராங்கனை பிவி சிந்து மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 17, 2017, 18:01 [IST]
Other articles published on Dec 17, 2017
English summary
PV Sindhu last to Japan's player in Super Series Badminton. Japan's Akane Yamaguchi beats Sindu in 21-15, 12-21, 19-21 straight sets in final match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X