Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து ... "வாவ்" போட்ட ஜூவாலா கட்டா!

ரியோ: ஒலிம்பிக் பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீனா வீராங்கனையை துவம்சம் செய்தார் பி.வி.சிந்து. சிந்துவின் வெற்றியை இந்திய பாட்மிட்டன் வீராங்கனைகள் டுவிட்டரில் பதிவிட்டு வாழ்த்து கூறி கொண்டாடி வருகின்றனர்.

பிரேசில், ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் காலிறுதிப் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள சீன தைபேயின் டாய் இங்கை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Rio 2016: PV Sindhu's success Jwala Gutta post twitter

சீனா வீராங்கனைக்கு எதிராக ஆடிய சிந்துவின் ஆக்ரோமான ஆட்டத்தை கேலரியில் அமர்ந்து இந்திய வீரர் வீராங்கனைகள் உற்சாகப்படுத்தினர்.

பெண்கள் இரட்டையர் பாட்மிண்டன் பிரிவில் விளையாடும் ஜூவாலா கட்டா சிந்துவின் வெற்றி குறித்து வாவ் என அச்சரியப்பட்டுள்ளார்,

பி.வி. சிந்து விளையாடும் அரையிறுதிப்போட்டி வரும் வியாழக் கிழமை நடைபெறும் என அட்டவணையிடப்பட்டுள்ளது. அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டியில் அடி எடுத்து வைத்தால் சிந்துவின் மூலம் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Wednesday, August 17, 2016, 13:32 [IST]
Other articles published on Aug 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+