For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் பேட்மிண்டன்... மானு அட்ரி - சுமீத் ரெட்டி ஜோடி தோல்வி !

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்தது.

பிரேசிலில் 31வது ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இன்று பேட்மிண்டன் போட்டிகள் ஆரம்பமாகின. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசியாவின் ஹெண்ட்ரா செட்டியாவான்- மொகமது அசான் ஜோடியை எதிர்கொண்டது.

Rio Olympics Badminton: Manu Attri-Sumeeth Reddy lose opener

முதல் செட்டில் இந்திய ஜோடி கடுமையாக போராடியது. இரண்டு ஜோடிகளும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 18 நிமிடங்கள் நீடித்த இந்த செட்டில் சுமீத் ரெட்டி- மானு அட்ரி ஜோடி 18-21 என முதல் செட்டை இழந்தது.

ஆனால் 2-வது செட்டில் இந்திய ஜோடி மிகவும் பின்தங்கியது. இதனால் இந்த செட்டை 13-21 என எளிதில் இழந்து 0-2 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சுற்றில் இந்திய ஜோடியால் 13 நிமிடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டது.

'டி' பிரிவில் இடம்பிடித்துள்ள சுமீத் ரெட்டி- மானு அட்ரி நாளை சீன ஜோடியையும், 14-ந்தேதி ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.

முன்னதாக நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வியைத் தழுவியது.

Story first published: Thursday, August 11, 2016, 21:11 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
Indian pair of Manu Attri and B. Sumeeth Reddy lost their opening Group D match at Rio Olympics, against the second seeded pair of Mohammad Ahsan and Hendra Setiawan of Indonesia in straight games 18-21, 13-21 here on Thursday 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+