ரூ. 13 கோடிக்கும் மேல.. "சில்வர் ஸ்டார்" சிந்து இதுவரை அள்ளிய பரிசுகள்!
ஹைதராபாத்: பி.வி.சிந்துவுக்கு இதுவரை அறிவிக்கப்பட்ட பரிசுகளின் எண்ணிக்கை ரூ. 13 கோடியைத் தாண்டி விட்டது.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வெற்றியை நாடே கொண்டாடியது. பரிசுகளும் மலை போல குவிந்து விட்டன.

இதுவரை பி வி.சிந்துவுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுகளின் தொகை ரூ. 13 கோடியைத் தாண்டி விட்டது.
அந்த விவரம்:
- தெலுங்கானா அரசு ரூ. 5 கோடி
- ஆந்திர மாநில அரசு வழங்கியது ரூ. 3 கோடி.
- டெல்லி அரசு அறிவித்தது ரூ. 2 கோடி.
- இந்திய பேட்மிண்டன் சங்கம், விளையாட்டுத்துறை, ஹரியானா, ம.பி. அரசுகள் தலா ரூ. 50 லட்சம்.
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ. 75 லட்சம்.
- கேரள தொழிலதிபர் முக்கட்டு செபாஸ்டியன் ரூ. 50 லட்சம்.
- இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 30 லட்சம்.
- அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ரூ. 5 லட்சம்.
- நடிகர் சல்மான் கான் ரூ. 25 லட்சம்.
- என்ஏசி ஜூவல்லர்ஸ் வழங்கும் ரூ. 6 லட்சம் மதிப்பு நெக்லஸ்.
- ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத் தலைவர் வி.சாமுண்டேஸ்வரநாத் வழங்கும் பிஎம்டபிள்யூ கார்.
- மத்திய ரயில்வே அமைச்சகம் ரூ. 50 கோடி
- ஆந்திரா - தெலுங்கானாவில் தலா 1000 சதுர அடி நிலம்.
- மகிந்திரா நிறுவனம் தரும் கார்.
- சிந்து மற்றும் அவரது பெற்றோருக்கு ஆந்திராவில் புத்தம் புதிய ஃபிளாட்டுகள்
Story first published: Wednesday, August 24, 2016, 13:43 [IST]
Other articles published on Aug 24, 2016


Click it and Unblock the Notifications