சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்-சாய்னா நெஹ்வால் சாம்பியன்

இன்று நடந்த இறுதிப் போட்டியில், சைனீஸ் தைபே வீராங்கனை ஸூ யிங் தாயை 21-18, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் சாய்னா. அரை மணி நேரத்தில் இந்தப் போட்டியை முடித்து விட்டார் சாய்னா.
உலகின் 6வது நிலை வீராங்கனையான சாய்னா மட்டுமே இந்த தொடரில் கடைசி வரை நீடித்த ஒரே வீராங்கனை. மற்றவர்கள் எல்லாம் அரை இறுதி வரை வந்து வீழ்ந்து விட்டனர். சாய்னா மட்டும் தாக்குப் பிடித்து இறுதி வரை முன்னேறி இறுதிப் போட்டியில் அபார வெற்றியைப் பெற்று சாம்பியன் ஆனார்.
கடந்த வாரம் நடந்த இந்திய ஓபன் கிரான்ட் பிரீ கோல்ட் பட்டத்தை வென்ற கையோடு சிங்கப்பூருக்கு வந்த சாய்னா இந்தப் பட்டத்தையும் தட்டியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications