சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் சாய்னா நேஹ்வால்.
சாய்னா வெல்லும் 2வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டம் இது. இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சூன் யூ வை 11-21, 21-14, 21-19 செட் கணக்கில் வீழ்த்தினார் சாய்னா.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சூன் யூவுடன் மோதிய சாய்னா தனது முதல் செட்டை 11-21 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அடுத்த இரு செட்களில் அவர் ஆவேசம் காட்டி ஆடினார். இதனால் அடுத்த இரண்டு செட்களையும் 21-14, 21-19 என்ற கணக்கில் கைப்பற்றை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார் சாய்னா.
சாய்னா வெல்லும் 2வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும் இது. கடந்த 3 ஆண்டுகளில் அவர் இரண்டாவது முறையாக இப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் சாய்னாவுக்கு இது 7வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும். மேலும் சூன் யூவுடன் நடந்த மோதல்களில் 6-1 என்ற கணக்கில் சாய்னாவின் முன்னிலையும் தொடர்கிறது.