Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பைனலில் நுழைந்து சாதித்தார் சாய்னா நேவால்!

ஜகார்த்தா: உலக பேட்மிண்டன், சாம்பியன்ஷிப் பைனலுக்குள் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் நுழைந்துள்ளார். அரையிறுதியில் அவர் இந்தோனேஷிய வீராங்கனை லின்டாவேனி ஃபனேட்ரியை நேர் செட்களில் தோற்கடித்த சாய்னா, உலக சாம்பியன்ஸ் பைனலில் நுழையும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், போட்டிகள் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்தோனேஷிய வீராங்கனை லிண்டாவேனி ஃபனேட்ரி ஆகியோர் மோதினர்.

Saina Nehwal creates history by reaching World Championships final

இப்போட்டியை 21-17 மற்றும் 21-17 என்ற நேர் செட்களில் வென்று சாய்னா பைனலுக்குள் நுழைந்தார். இதன்மூலம் பைனலுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சாய்னா பெற்றார்.

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில், உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின், கரோலினா மரினை சாய்னா சந்திக்க உள்ளார்.

Story first published: Saturday, August 15, 2015, 18:15 [IST]
Other articles published on Aug 15, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+