For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்.. முதல் போட்டியிலேயே சாய்னா நேவாலுக்கு முத்தான வெற்றி

By Veera Kumar

ஹாங்காங்: 'ஹாங்காங் ஓபன்' சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஹாங்காங் ஓபன் டென்னிஸ், கோவ்லூன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்த நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இன்று களம் கண்டார்.

Saina Nehwal enters last-16 stage of Hong Kong Open

சாய்னா நேவால் தனது முதல் சவாலை தாய்லாந்தின் போர்ன்டிப் பரனாப்ரசெர்ட்சக்கை எதிர்கொண்டார். முதல் சுற்றை 12-21 என்ற கணக்கில் சாய்னா இழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், தீரத்துடன் திருப்பியடித்த சாய்னா நேவால், அடுத்தடுத்த செட்களை 21-19, 21-17 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனால் 'கடைசி 16' சுற்றில் விளையாட சாய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் சுசான்டோவை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாய், அஜய் ஜெயராம், சாய் பிரனீத் ஆகியோரும் இந்த போட்டித்தொடரில் பங்கேற்கிறார்கள்.

Story first published: Wednesday, November 23, 2016, 13:30 [IST]
Other articles published on Nov 23, 2016
English summary
Saina Nehwal enters last-16 stage of Hong Kong Open beating Porntip Buranaprasertsuk 12-21, 21-19, 21-17.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+