For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தரவரிசையில் டாப் 10ஐ இழந்தார்.. 11வது இடத்தில் சாய்னா நெஹ்வால்!

உலக பாட்மின்டன் தரவரிசையில் டாப் 10 இடத்தை இழந்தார் சாய்னா நெஹ்வால். 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெல்லி: உலக பாட்மின்டன் கூட்டமைப்பின் தரவரிசையில் 10வது இடத்தில் இருந்த சாய்னா நெஹ்வால் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே நேரத்தில் பிவி சிந்து தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளார்.

உலக பாட்மின்டன் கூட்டமைப்பின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இதுவரை 10வது இடத்தில் இருந்து இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Saina nehwal sliped to 11th spot in world ranking

சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் ஸ்பெயினின் கரோலினா மெர்லினிடம் தோல்வியடைந்தார் சாய்னா. அதையடுத்து டாப் 10 இடத்தை இழந்தார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் பைனலில் மரினிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து. அவர் தொடர்ந்து உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சீன தைபேயின் டாய் ட்சு யிங் மற்றும் ஜப்பானின் அகினே யாமகூச்சி தொடர்ந்து முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 2 இடங்கள் பின்தங்கி, 8வது இடத்தில் உள்ளார். எச்.எஸ் பிரனாய் தொடர்ந்து 11வது இடத்தில் உள்ளார்.

ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் டாப் 20ல் இந்திய ஜோடிகள் இல்லை. ஆடவர் பிரிவில் சாத்விக்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி 2 இடங்கள் முன்னேறி, 23வது இடத்தில் உள்ளனர். கலப்பு இரட்டையரில் பிரனவ் ஜெர்ரி சோப்ரா, என்.சிக்கி ரெட்டி ஜோடி, 24வது இடத்தில் உள்ளது.

Story first published: Friday, August 10, 2018, 18:42 [IST]
Other articles published on Aug 10, 2018
English summary
Saina nehwal sliped to 11th spot in world ranking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+