ஆஸ்திரேலியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார் சாய்னா நேவால்!
சிட்னி: ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில், ஒற்றையர் தரவரிசை பட்டியலில் பதினோறாவது இடத்தில் உள்ள கரோலினா மரீனை இந்திய வீராங்கனை சாய்னா எதிர்கொண்டார்.

அதிரடி ஆட்டம்...
தொடக்கம் முதலே சாய்னா அதிரடியாக விளையாடியதால், அவரை எதிர்கொள்ள கரோலினா திணறினார்.

சாய்னா வெற்றி...
சுமார் 43 நிமிடங்கள் நீடித்த போட்டியின் இறுதியில் 21-18, 21-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார் கரோலினா.

ரூ 4.5 கோடி பரிசு...
வெற்றி பெற்ற சாய்னாவுக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ 4.5 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள சாய்னா, முதல் 5 இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.

2வது வெற்றி...
இந்தாண்டு துவக்கத்தில் டெல்லியில் நடந்த இந்தியா ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் கோப்பை வென்ற சாய்னா தற்போது மீண்டும் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications