Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் பேட்மிண்டன்... வெற்றியுடன் தொடங்கினார் சாய்னா !

ரியோ டி ஜெனிரோ: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேஹ்வால் வெற்றி பெற்றார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதுவரை இந்திய வீரர்கள் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை என பலவற்றிலும் நமக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று தொடங்கிய ஒலிம்பிக் பேட்மிண்டன் தனிநபர் போட்டியில் சாய்னா, பிரேசிலின் லொஹானி விசெண்டேவுடன் மோதினார்.

Saina Nehwal wins her first Group G game at Rio

இந்த போட்டியின் துவக்கம் முதலே இரு வீராங்கனைகளும் வெற்றிக்காக போராடினர். விறுவிறுப்பாக நடந்த முதல் செட்டில் சாய்னா 21-17 என வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சாய்னா அந்த செட்டையும் 21-17 என எளிதாக வென்றார்.

முடிவில், பிரேசிலின் லொஹானி விசெண்டேவை 21-17, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் சாய்னா.

Story first published: Friday, August 12, 2016, 0:15 [IST]
Other articles published on Aug 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+