For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாய்னாவின் தீபாவளிப் பரிசு... சீன ஓபன் சூப்பர் சீரிஸில் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்

பீஜிங்: சீனாவில் நடைபெற்று வரும்சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சீனாவின் புஸவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், 11வது இடத்தில் உள்ள சீனாவின் சன் யுவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பு நிறைந்த இந்தப்போட்டியில் 22-20, 21-18 என்ற நேர் செட்களில் சாய்னா போராடி சன் யூ-வை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

5வது முறை...

5வது முறை...

இந்த ஆட்டம் 49 நிமிடங்களில் முடிவடைந்தது. சர்வதேச போட்டிகளில் சன் யுவை சாய்னா வீழ்த்துவது இது 5வது முறையாகும். சாய்னாவின் இந்த வெற்றியை தீபாவளிப் பரிசாக ரசிகர்கள் கொண்டாடினர்.

பி.வி.சிந்து...

பி.வி.சிந்து...

இதேபோல், மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்து 21-14, 21-9 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் ஹெஸ்னியாவை வீழ்த்தி 2வது சுற்றில் நுழைந்தார்.

ஆண்கள் பிரிவு...

ஆண்கள் பிரிவு...

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அஜய் ஜெயராம் 12-21, 11-21 என்ற நேர்செட்டில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஷென்லாங்கிடம் தோல்வியடைந்தார்.

தோல்வி...

தோல்வி...

காந்த் 12-21, 18-21 என்ற செட் கணக்கில் ஹாங் ஹாங்கின் ஹு யூனிடமும், பிரணாய் 14-21, 21-17, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவின் குவோ ஹாயிடமும் தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் வெளியேறினர்.

Story first published: Thursday, November 12, 2015, 12:08 [IST]
Other articles published on Nov 12, 2015
English summary
It is indeed a happy Diwali for Saina Nehwal. The World No.2 toiled hard before defeating Chinese World No.11 Sun Yu 22-20, 21-18 to enter the second round of the China Open Super Series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+