பி.வி.,சிந்துவுக்கு மணற்சிற்பம் மூலம் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து
பூரி: ஒலிம்பிக் பாட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியதற்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் ஒன்றை அமைத்து அதன் மூலம் தனக்கே உரிய பாணியில் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து கூறியுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 2ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கு மணற் சிற்பக்கலைஞர் சுதர்சன் வாழ்த்து கூறியுள்ளார்.
பாட்மிண்டன் ராக்கெட்டும், பந்தும் கடற்கரை மணலில் வரைந்து வாழ்த்து கூறியுள்ளார் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் முன்னர், அதனை வரவேற்கும் வகையிலும், இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் ஒரிசா கடற்கரையில் மணற்சிற்பம் ஒன்றை கலைநயத்துடன் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று மீண்டும் சுதர்சனில் மணல் சிற்பத்தில் இடம்பெறுவார் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications