Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகள் வென்றது கடவுளின் கருணை... இறுதிப்போட்டியிலும் வெற்றி பெறுவாள் - பி.வி.சிந்துவின் பெற்றோர்

ரியோ: இறுதிப் போட்டிக்குள் எங்களது மகள் சிந்து நுழைந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, உறுதியாக அவர் வெற்றி பெறுவார் என்று பி.வி சிந்துவின் தந்தை மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கடவுளின் கருணையால் தங்களின் மகள் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவாள் என்று சிந்துவின் தாயார் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவை எளிதாக இந்தியாவின் பி.வி. சிந்து தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

She will win by god's grace:PV Sindhu's mother

ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் இந்த விளையாட்டை பார்த்துக் கொண்டு இருந்த சிந்துவின் பெற்றோர் சிந்துவின் வெற்றியை அடுத்து தங்களது மகிழ்ச்சியை கை தட்டி வெளிப்படுத்தினர்.

She will win by god's grace:PV Sindhu's mother

சிந்துவின் வெற்றிக்காக நாங்கள் தினமும் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தோம் என்று அவரது தாய் தெரிவித்தார். இறுதிப் போட்டியிலும் கடவுளின் கருணையால் அவள் வெற்றி பெறுவாள் என்று கூறியுள்ளார் அவரது தாயார்.

She will win by god's grace:PV Sindhu's mother

வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் சிந்துவின் தந்தை, அதே மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் பேசினார். ''விளையாட்டு துவக்கத்தில் கடினமாக டென்ஷனாக இருந்தது. அதற்குப் பின்னர் சிந்து முன்னேறிச் சென்று கொண்டே இருந்தார்.

She will win by god's grace:PV Sindhu's mother

15-10 என்ற புள்ளிகளில் இருந்தபோது எங்களுக்கு சிந்து வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கோபிசந்தும், சிந்துவும் கடினமாக் உழைத்தார்கள். இந்த வெற்றி நாளை சிந்து உறுதியாக வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையை அளித்துள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்'' என்று ஆரவாரத்துடன் கூறினார்.
அங்கு கூடியிருந்தவர்கள் சிந்துவின் பெற்றோருக்கு கை கொடுத்து தங்களது மகிச்சியை வெளிப்படுத்தினர்.

Story first published: Friday, August 19, 2016, 9:43 [IST]
Other articles published on Aug 19, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+