ரியோ ஒலிம்பிக்.. டுவிட்டரில் தொடர்ந்து வெறுப்பேற்றும் ஷோபா டே... திங் பாசிடிவ் ப்ளீஸ்
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து பேட்மிண்டன் விளையாட்டில் தங்கம் வெல்ல வேண்டும் என்று அனைவரும் ஆவலாய் காத்திருக்க "வெள்ளி இளவரசி பிவி சிந்து?" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கட்டுரையாளர் ஷோபா டே. இதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் முதல் வெண்கல பதக்கத்தை சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்ந்தார். அதே போன்று, இரண்டாவது பதக்கத்தை பெற்று சாதனை படைக்க தயாராக இருக்கிறார் பி வி சிந்து.
அவர் இறுதி ஆட்டத்திற்கு சென்றதன் மூலம் தங்கம் கிடைக்கலாம் அல்லது வெள்ளியும் கிடைக்கலாம் என்ற நிலையில், இந்தியர்கள் அனைவரும் பி வி சிந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வெள்ளி இளவரசியா?
இந்த நிலையில் பிரபல கட்டுரையாளர் ஷோபா டே வெள்ளி இளவரசியா பி வி சிந்து என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இந்திய விளையாட்டு வீர்ர் மற்றும் வீராங்கனைகளை இரண்டாம் இடத்தில் வைத்து பார்ப்பது போன்று உள்ளது. ஷோபா டேவின் இந்தப் பதிவு பலரின் மனதை புண்படுத்தியுள்ளது.

ஷோபா டேவுக்கு எதிர்ப்பு
ஷோபா டேவின் இந்தப் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில் பலர் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர் அதில் அக்ஷைய் அரோரா "தங்கமோ வெள்ளியோ நிறம் முக்கியமல்ல. 125 கோடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திள்ளது முக்கியம்" என்று பதிலுக்கு ட்விட் செய்துள்ளார்.
தொடர்ந்து கிண்டல்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஒரு பதக்கத்தையும் பெறாத கோபத்தில், செல்பி எடுத்துக் கொள்ளத்தான் இந்திய வீர்ர்கள் ரியோ சென்றுள்ளார்கள் என்றும் இதனால் பணம்தான் விரயம் என்றும் ஷோபா டே ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி இருந்து பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தங்கம் நிச்சயம்
ஷோபா டேயிடம் இருந்து கிண்டல்கள் தொடர்ந்தாலும் இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் பி வி சிந்து ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மர்லினை வீழ்த்தி தங்கம் வெல்வார் என்று அனைவரும் நம்புவோம்.


Click it and Unblock the Notifications