Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஓபனி்ல் ஒரே நம்பிக்கை சிந்து…. அரை இறுதிக்கு முன்னேறினார்

டெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்துள்ள ஒரே இந்தியராகிறார் பி.வி.சிந்து. இந்தப் போட்டியில் இருந்து சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கால் இறுதியில் தோல்வியடைந்தனர்.

இந்தியன் ஓபன் பாட்மின்டன் போட்டிகள் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிக்கு நடப்பு சாம்பியனான பிவி சிந்து முன்னேறினார்.

Sindhu in semis


கால் இறுதியில் ஸ்பெயினின் பீட்ரிஸ் கோராலஸை 21-12, 19-21, 21-11 என்ற செட்களில் சிந்து வென்றார். அரை இறுதியில் 2013 உலக சாம்பியனான ராட்சனோக் இன்தனோனை அவர் சந்திக்கிறார்.

முன்னதாக முன்னாள் சாம்பியனான சாய்னா நெஹ்வால், அமெரிக்காவின் பீவென் ஜாங்கிடம் 21-10, 21-13 என்ற செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி, பிரனவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

மற்றபடி, இந்திய ஓபன் போட்டியின் அரை இறுதிக்கு வேறு எந்த இந்திய வீரரும், வீராங்கனையும் தகுதி பெறவில்லை.

ஆடவர் பிரிவில் எச்.எஸ். பிரனாய் காயம் காரணமாக முதல் சுற்றிலேயே வெளியேறினார். முன்னாள் சாம்பியனான கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினார்.

காலிறுதி ஆட்டங்களில் பி. கஷ்யப், பி. சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோரும் தோல்வியடைந்து வெளியேறினர்.



Story first published: Sunday, February 4, 2018, 18:53 [IST]
Other articles published on Feb 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+