ஆல் இங்கிலாந்து ஓபன் காலிறுதியில் சிந்து, பிரனாய்… ஸ்ரீகாந்த் வெளியேறினார்
டெல்லி: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து, எச்எஸ் பிரனாய், முன்னேறினர். அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பாட்மின்டன் போட்டியில் மிகவும் பழைமையான மற்றும் பெருமைமிக்க ஆல் இங்கிலாந்து ஓபன்,பிரிட்டனின் பிர்மிங்ஹாமில் நடக்கிறது.

நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்றில், சாய்னா நெஹ்வால், சாய் பிரனீத் ஆகியோர் போராடி தோற்றனர்.
மகளிர் ஒற்றையரில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோசுவாங்கை வென்ற பிவி சிந்து, நேற்று இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் நிட்சான் ஜின்டபோலை 21-13, 13-21, 21-18 என்ற செட்களில் வென்று, கால் இறுதிக்கு முன்னேறினார்.
உலகத் தரவரிசையில், மூன்றாவது இடத்தில் உள்ள ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, முதல் செட்டில் போராடி வென்றார். இரண்டாவது சுற்றில் கடும் சவால் விடுத்தும், தோல்வியடைந்தார். போட்டியின் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய மூன்றாவது சுற்றில், தாய்லாந்து வீராங்கனை கடும் சவால் விடுத்த போதும், கிடைத்த கேப்பில் புள்ளிகளை சேகரித்து கால் இறுதிக்கு முன்னேறினார் சிந்து. கால் இறுதியில் ஜப்பானின் நோசோபி ஒகுகாராவை சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 16வது இடத்தில் உள்ள எச்எஸ் பிரனாய், முதல் சுற்றில், தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ள சீன தைபேயின் சோவ் டியான் சென்னை 9-21, 21-18, 21-18 என்ற செட்களில் முதல் சுற்றில் வென்றார். நேற்று இரவு நடந்த இரண்டாவது சுற்றில், இந்தோனேசியாவின் டோமி சுகியார்தோவா 21-10, 21-19 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் ஹூவாங்கிடம், 11-21. 21-15, 20-22 என்ற செட்களில் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
சீன வீரர் ஹூவாங்கை கால் இறுதியில் சந்திக்கிறார் பிரனாய்
Story first published: Friday, March 16, 2018, 12:07 [IST]
Other articles published on Mar 16, 2018


Click it and Unblock the Notifications