பிரெஞ்ச் ஓபன் காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்.. சாய்னா அவுட்!
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினர். அதே நேரத்தில் சாய்னா நெஹ்வால் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார்.
சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள், பாரிஸில் நடந்து வருகிறது.

முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடாமலே வென்ற ஸ்ரீகாந்த், இரண்டாவது சுற்றி ஹாங்காங்கின் வாங்க் விங்க் கி வின்செட்டை சந்தித்தார். 37 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில் 21-19, 21-17 என்று வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டில் கொரியா மற்றும் இந்திய ஓபன் பட்டங்களை வென்ற பி.வி. சிந்து மூன்றாவது சூப்பர் சீரியஸ் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளார். இரண்டாவது சுற்றில், ஜப்பானின் சயாகா தகஹாசியை 21-14, 21-13 என்று செட்களில் சுலபமாக வென்றார். டென்மார்க் ஓபனில் முதல் சுற்றில் தன்னை வீழ்த்திய சீனாவின் சென் யூபெயை காலிறுதியில் சிந்து சந்திக்கிறார்.
முதல் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சாய்னா நெஹ்வால், இரண்டாவது சுற்றில் ஜப்பானின் அகினே யாமகூச்சியிடம் 21-9, 23-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். டென்மார்க் ஓபன் காலிறுதியிலும் இவரிடம் சாய்னா தோல்வியடைந்திருந்தார்.
ஆடவர் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இந்த ஆண்டில் இரண்டாவது காலிறுதிக்கு முன்னேறினர்.
Story first published: Friday, October 27, 2017, 14:33 [IST]
Other articles published on Oct 27, 2017


Click it and Unblock the Notifications