விளையாட்டுப்புள்ள சிந்துவுக்கு பொறுப்பு வந்துருச்சு..
ஐதராபாத்: விளையாட்டுப்புள்ள என்றால் விளையாட்டுத்தனமாக இருப்பதல்ல, விளையாட்டே உயிராக இருப்பவர், பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து. விளையாட்டு குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய உடலில், விளையாட்டு ரத்தம் பாய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஒலிம்பிக், உலக சாம்பியன் போட்டி என, சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றதுடன், உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளார். இந்த அளவுக்கு அவர் உயர்ந்ததற்கு, அவருடைய கடினமாக உழைப்பு, விளையாட்டின் மீதுள்ள காதலுடன், அவருடைய கோச் புல்லேலா கோபிசந்தின் பயிற்சி மிக முக்கியமானது.

சாய்னா நெய்வால், சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்பட பல சர்வேதேச வீரர்களை உருவாக்கியவர், 2001ல் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்ற கோபிசந்த்.
8 வயதில் பாட்மின்டன் கற்றுக் கொள்ள துவங்கிய சிந்து, கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறியவர், கோபிசந்தின் தீவிர பயிற்சியினால், ராக்கெட் வேகத்தில் வளர்ந்தார்.
தன்னை வளர்த்த குருவுக்கு நன்றி செலுத்தும் வகையில், டிஜிட்டில் படம் ஒன்றை தயாரித்துள்ளார் சிந்து. சிறுமியாக இருந்தது முதல், தற்போது வரை, கோபிசந்த் உடனான தனது குரு- சிஷ்யை உறவு குறித்தும், கோபிசந்த் குறித்து தெரியாத தகவல்களையும் இந்த படத்தில் தொகுத்துள்ளார்.
ஆசிரியர் தினமான இன்று, பொறுப்புள்ள ஒரு மாணவியாக, குருவுக்கு தனது காணிக்கையாக இந்த படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
Story first published: Tuesday, September 5, 2017, 17:31 [IST]
Other articles published on Sep 5, 2017


Click it and Unblock the Notifications