Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் பிவி.சிந்து, சாய் பிரனீத் வெற்றி!

சிங்கப்பூர்: ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சாய்பிரனீத் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பிவி.சிந்து ஜப்பானின் நோஸோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இதில் முத்ல் சுற்றை பறிகொடுத்த சிந்து பின்னர் சுதாரித்து விளையாடினார்.

Singapore Open: PV Sindhu, Sai Praneeth enters in second round

இதன்மூலம் 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் தன்னை எதிர்த்து விளையாடிய நோஸோமி ஒகுஹராவை வீழ்த்தி சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் வெற்றி பெற்றார். டென்மார்க்கின் எமில் ஹால்ஸ்டை எதிர்கொண்ட அவர் சிந்துவை போல் முதல் செட்டை பறிகொடுத்தார்.

பின்னர் விடா முயற்சியுடன் ஆடிய அவர் 17-21, 21-7, 21-19 என்ற செட்களில் ஹால்ஸ்டை வீழ்த்தி போட்டியை கைப்பற்றினார். இதன்மூலம் சாய் பிரனீத்தும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, April 12, 2017, 18:32 [IST]
Other articles published on Apr 12, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+