Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது எப்படிங்க நடந்தது.. மொத்தமாக எழுந்து நின்ற மைதானம்.. இங்கிலாந்தும் எதிர்பார்க்கவில்லை.. டிவிஸ்டு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து உள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து 112 ரன்னிற்கு சுருண்டது.அக்சர் பட்டேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி உள்ளனர்.

இந்திய அணி தற்போது பேட்டிங் இறங்கி உள்ளது. இங்கிலாந்து அணியை எளிதாக சுருட்டிய நிலையில் இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து உள்ளனர். இந்த போட்டியின் தொடக்கத்திற்கு முன்பே பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று உறுதியாகிவிட்டது. ஆனால் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்குமா, பாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்குமா என்று கேள்வி எழுந்தது.

தைரியம்

தைரியம்

ஆனால் இந்திய அணி தைரியமாக பிட்சை பார்த்து 3 ஸ்பின் பவுலர்களை களமிறங்கியது. உமேஷ் யாதவை கொண்டு வருவார்கள் என்று எல்லோரும் நினைத்த போது தைரியமாக சுந்தர் களமிறக்கப்பட்டார். அவர் நினைத்தது போல இன்று ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாகவே பிட்ச் இருந்தது.

ஆனால்

ஆனால்

ஆனால் இங்கிலாந்து அணி பிட்சை தவறாக கணித்து பாஸ்ட் பவுலர்கள் 4 பேருடனும், 1 முழு நேர ஸ்பின் பவுலருடனும் களமிறங்கினார்கள் . இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து பிட்சை பயன்படுத்திக்கொண்டு இந்திய ஸ்பின் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். சில பந்துகளை இந்திய பவுலர்கள் வீசும் போது மைதானமே எழுந்து நின்றது.

கணிப்பு

கணிப்பு

இன்று விழுந்த இங்கிலாந்தின் 10 விக்கெட்டில் 9 விக்கெட் ஸ்பின் பவுலர்கள் எடுத்தது. அதில் போல்ட், எல்பிடபிள்யுதான் ஆதிக்கம். டாஸ் தோல்வி அடைந்தாலும் ஸ்பின் பிட்சை பயன்படுத்தி அக்சர், அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்துகளை இங்கிலாந்து வீரர்களால் கணிக்கவே முடியவில்லை.

குழப்பம்

குழப்பம்

எந்த பந்து டர்ன் ஆகும், எந்த பந்து நேராக செல்லும் என்று தெரியாமல் இங்கிலாந்து வீரர்கள் குழம்பி போனார்கள். இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி அதிக விக்கெட்டுகளை இழந்தது.இங்கிலாந்து அணி இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 24, 2021, 23:40 [IST]
Other articles published on Feb 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+