பேட்மிண்டன் விளையாட்டில் நம்பர் 1 வீராங்கனைதான் என் லட்சியம்: சாய்னா நேவால்
மும்பை: உலகின் முதல் நிலை வீராங்கனையாக தம்மால் வர முடியும் என்று இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான சாய்னா நேவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா, 8 அல்லது 9 வயதில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டிக்காக தானேயில் விளையாடியதுதான் முதல் போட்டி. என்னைப் பொறுத்தவரை உலகின் முதல் நிலை வீராங்கனையாக வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுதான் என் கனவும் கூட. அதை இலக்காக வைத்தே நான் விளையாடி வருகிறேன். நான் உலக சாம்பியனான வருவேன் என்று சிறுவயதில் என் அம்மா நம்பிக்கையோடு சொல்வார். அப்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். ஆனால் இப்போது அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன் என்றார்.
மேலும் 60% கடின உழைப்பும் 40% புத்திசாலித்தனமும் இருந்தால் நிச்சயம் நம்மால் வெல்ல முடியும். என்னுடைய உடல் வலு எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டமாக இருக்கிறது. அதனால்தான் என்னால் போட்டிகளில் நிலைத்து நிற்க முடிகிறது என்றும் கூறியுள்ளார்.
சாய்னாவின் கனவு நனவாகட்டுமே!


Click it and Unblock the Notifications