அசிங்கமாக கமெண்ட் அடிக்கிறார்கள் ரசிகர்கள்... ஜுவாலா கட்டா வருத்தம்
பெங்களூர்: ரசிகர்கள் என்னைப் பற்றி அசிங்கமாக கமெண்ட் அடிக்கிறார்கள் என்று கோபம் வெளியிட்டுள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா.
சமீபத்தில் கட்டாவுக்கும், சாய்னா நேவாலுக்கும் இடையே டிவிட்டரில் போர் வெடித்தது.
இந்த நிலையில் ரசிகர்கள் மீது தனது கோபத்தைத் திருப்பியுள்ளார் ஜுவாலா கட்டா.

பெங்களூர் ஸ்டேடியத்தில்
பெங்களூர் ஸ்ரீகண்டீரவா இன்டோர் ஸ்டேடியத்தில் இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி நடந்தது. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.

ரசிகர்களின் கமெண்ட்டால் முகம் சுளிப்பு
போட்டியின்போது ஜுவாலா குறித்து ரசிகர்கள் சிலர் அடித்த கமெண்ட் அவரை கோபப்படுத்தி விட்டதாம்.

போட்டி முழுக்க லூட்டி
இந்தப் போட்டியில் ஜுவாலாவும், திஜுவும் இணைந்து இரட்டையர் ஆட்டத்தில் ஆடினர். போட்டி முழுவதும் சிலர் ஜுவாலாவைப் பார்த்து கமெண்ட் அடித்தபடி இருந்ததால் அவர் எரி்ச்சலடைந்தார்.

கோபம்
இதன் காரணமாக போட்டி முடிந்ததும் இறுகிய முகத்துடன் அவர் வெளியேறினார்.

அதிகாரிகளுடன் மோதல்
மேலும் இப்படிப்பட்ட ரசிகர்களை ஏன் உள்ளே விடுகிறீர்கள் என்று கேட்டு போட்டி அமைப்பாளர்களுடன் அவர் சூடான வாதத்திலும் ஈடுபட்டதைக் காண முடிந்தது.


Click it and Unblock the Notifications