Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடுவது பெருமையாக உள்ளது- ஜூவாலா கட்டா

Jwala Gutta
மும்பை: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ள இந்தியாவின் ஜூவாலா கட்டா, இந்தியாவுக்காக விளையாடுவது பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி, அடுத்த மாதம்(ஜூலை) 27ம் முதல் துவங்க உள்ளது. இதில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் தரப்பில் சாய்னா நேவால், ஜூவாலா கட்டா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடுவது தனக்கு பெருமையாக உள்ளதாக ஜூவாலா தெரிவி்த்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடுவது பெருமையாக உள்ளது. இதனால் என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக ஆட முயற்சி செய்வேன். அதற்காக எனது உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

என் மீதான அதிக எதிர்பார்ப்பால், பதக்கம் பெற வேண்டும் என்ற மனஅழுத்தம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் போட்டியை பொறுத்தவரை சாய்னா நேவால் பதக்கம் பெறவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள அனைத்து வீரர்களும், வீராங்கனைகளும் பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளோம். மற்ற விளையாட்டுகளை பொறுத்த வரை துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங், குத்துசண்டை வீராங்கனை மேரி காம் ஆகியோர் பதக்கம் பெறுவார் என்று நம்புகிறேன் என்றார்.

லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள ஜூவாலா குட்டா, பெண்கள் இரட்டையர் போட்டியில் அஸ்வினி பொன்னப்பா உடனும், கலப்பு இரட்டையரில் வி.டிஜூ உடனும் ஜோடி சேர்ந்து ஆட உள்ளார்.

Story first published: Friday, June 29, 2012, 13:17 [IST]
Other articles published on Jun 29, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+