ஒலிம்பிக் பாட்மிண்டன்: கலப்பு இரட்டையர் போட்டியில் இந்திய ஜோடி தோல்வி!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியாக கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா, வி.டிஜூ ஜோடி, இந்தோனேஷியாவின் டான்டவி அஹ்மது, லிலியானா நட்சிர் ஜோடியை எதிர் கொண்டது.
பரபரப்பான போட்டியில் இந்தியா ஜோடி வெற்றி பெற கடுமையாக போராடியது. ஆனால் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இப்போட்டியில், இந்தோனேஷியா ஜோடி 21-16, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
கலப்பு இரட்டையர் போட்டியில் சி பிரிவில் உள்ள இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளது. அடுத்த போட்டியில் இந்திய ஜோடி, டென்மார்க்கை சேர்ந்த ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளது.
Story first published: Saturday, July 28, 2012, 16:06 [IST]
Other articles published on Jul 28, 2012


Click it and Unblock the Notifications