Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீரர்களை விளையாட விடாமல் தடுத்த ஜுவாலா கட்டா... விசாரணை வருகிறது

டெல்லி: இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரின்போது டெல்லி ஸ்மாஷர்ஸ் வீராங்கனைகளை ஒரு போட்டியி்ல விளையாட விடாமல் தடுத்தது தொடர்பாக முன்னணி வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் விசாரணை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஐபிஎல் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தவுள்ளது.

பெங்களூரில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த போட்டியில் விளையாட விடாமல் டெல்லி வீரர்களை ஜுவாலா தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏன் தடுத்தார்...

ஏன் தடுத்தார்...

பங்கா பீட்ஸ் அணிக்கு எதிரான போட்டி இது. இதில், காயமடைந்த வீரர் ஹூ யூன்-க்குப் பதில், ஜான் ஓ ஜோர்ஜென்சனை சேர்க்க அந்த அணி முயன்றது. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது.

ஜுவாலா எதிர்ப்பு

ஜுவாலா எதிர்ப்பு

ஆனால் இந்த மாற்றத்தை ஜுவாலா விரும்பவில்லை. மாற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். மேலும் நமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் இந்தப் போட்டியில் நாம் விளையாடக் கூடாது என்றும் சக டெல்லி வீரர்களை வலியுறுத்தினாராம்.

ஜுவாலா நெருக்குதல் வென்றது

ஜுவாலா நெருக்குதல் வென்றது

ஜுவாலா கட்டாவின் கோரிக்கை மற்றும் நெருக்குதல் காரணமாக பங்கா பீட்ஸ் அணி தனது வீரரை மாற்ற ஐபிஎல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. அதன் பிறகே டெல்லி வீரர்களை விளையாட அனுமதித்தாராம் ஜுவாலா.

இப்போதுதான் அம்பலம்

இப்போதுதான் அம்பலம்

வீரர்களை விளையாடக் கூடாது என்று ஜுவாலா அழுத்தம் கொடுத்தது முதலில் ஐபிஎல்லுக்குத் தெரியவில்லையாம். இப்போதுதான் அது தெரிய வந்துள்ளதாம். இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

தற்போது 14 நாட்களுக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஜுவாலாவுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விசாரணையை ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நடத்தவும் ஐபிஎல் தீர்மானித்துள்ளதாம்.

Story first published: Friday, September 6, 2013, 11:38 [IST]
Other articles published on Sep 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+