Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரை இறுதியில் சாய்னா தோல்வி- வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட தகுதி

image-03-saina-nehwal.jpg tamil.mykhel.com}லண்டன்: லண்டன் ஒலிம்பிக் பாட்மிண்டன் அரை இறுதியில் இந்தியாவின் பதக்க நட்சத்திரமான சாய்னா நேவால் தோல்வியடைந்துவிட்டார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் அரையிறுதியில் சீனாவின் இகான் வாங்கை இந்தியாவின் சாய்னா இன்று எதிர்கொண்டார். உலகின் முதல் நிலை வீராங்கனையான இகான் வாங்குடன் இதுவரை சாய்னா மோதிய போட்டிகள் அனைத்திலுமே இகான்வாங் தான் வென்றிருக்கிறார். இதனால் இன்றைய போட்டி சாய்னாவுக்கு மிகவும் சவாலாக இருக்கும் என்றே கருதப்பட்டு வந்தது.

சாய்னா நேவால் முதலாவது செட்டை 13-21 என்ற புள்ளி கணக்கில் இழந்திருந்தார். இரண்டாவது செட்டிலும் சாய்னா போராடிப் பார்த்தார் அவரால் இகான் வாங்கை வெல்ல முடியவில்லை. இரண்டாவது செட்டும் 13-21 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் இகான் வாங் வசமானது.

தோல்வி குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,

சீன வீராங்கனை வாங் ஆடுகளத்தில் என்னை விட மிக வேகமாக செய்யப்பட்டார். ஆனால் என்னால் ஆடுகளத்தில் வேகமாக செயல்பட முடியவில்லை. போட்டியின் முக்கிய கட்டத்தில் சில தவறுகளை செய்ததால் தோல்வியை தழுவினேன்.

தோல்வியை தவிர்க்க நான் மேற்கொண்ட அணுகுமுறைகளை வாங் முறியடித்துவிட்டார். இதனால் புள்ளிகளை பெற முடியவில்லை. ஆடுகளத்தில் வேகமாக செயல்பட்ட வாங், அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டார். இது போன்ற அதிரடி ஆட்டத்தை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை என்றார்.

வெண்கலம் யாருக்கு?

பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் சீனா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீன வீராங்கனை இகான் வாங் உடன் மோதி தோல்வி அடைந்தார் இந்தியாவின் சாய்னா நேவால். இதனால் இறுதிப் போட்டியில் சீனாவை சேர்ந்த 2 வீராங்கனைகள் மோத கொள்ள உள்ளனார்.

இந்த நிலையில் வெண்கலம் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் மற்றொரு வீராங்கனையான வாங் ஜின் உடன் சாய்னா மோத உள்ளார். தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சாய்னா நேவால், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜின் உடன் மோத உள்ளார். ஏற்கனவே பெண்களுக்கான தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் சீனாவிற்கு சொந்தமான நிலையில், இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் கிடைக்குமா?

Story first published: Friday, August 3, 2012, 18:15 [IST]
Other articles published on Aug 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+