Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக் பாட்மிண்டன்: சாதித்தார் சாய்னா- அரையிறுதிக்கு முன்னேற்றம்- காஷ்யப் தோல்வி

Saina Nehwal
லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது வீராங்கனையும் சாய்னாதான். ஆடவர் ஒற்றையப் பிரிவில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த காஷ்யப் மலேசிய வீரரிடம் தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் டென்மார்க் வீராங்கனை டின்னி பெயூனை எதிர் கொண்டார் சாய்னா. இதில் 21-15, 22-20 என்ற நேர் செட்களில் சாய்னா வென்றார். தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சாய்னாவுக்கு அரையிறுதிச் சுற்று மிகுந்த சவாலாக இருக்கக் கூடும். அவர் முதல்நிலை வீராங்கனையான சீனாவின் இகன் வாங்கை சந்திக்கிறார் சாய்னா.

தமது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சாய்னா, இந்த வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும், அடுத்த போட்டி உலக தரவரிசையின் முதலிடத்தில் இருக்கும் வீராங்கனைக்கு எதிரான போட்டி கடுமையானதாக இருக்கும் என்றாலும் தான் அதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

காஷ்யப் தோல்வி

ஒலிம்பிக் பாட்மிண்டனில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் மலேசியாவின் சாங் வெய் லீயுடன் மோதினார்.

ஆட்டத்தின் முதல் பாதியை வெய் லீ 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது பாதியையாவது காஷ்யப் கைப்பற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 11-21 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது செட்டையும் காஷ்யப் இழந்தார்.

இதனால் வெய் லீ 21-19, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய ஆண் என்ற பெருமையைப் பெற்றிருந்த காஷ்யப், காலிறுதியில் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது.

Story first published: Friday, August 3, 2012, 8:19 [IST]
Other articles published on Aug 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+